close
Choose your channels

சென்னை 600028' 2ஆம் பாகத்தில் நிஜ கிரிக்கெட் வீரர்கள்

Monday, April 25, 2016 • தமிழ் Comments
சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் பாகத்தில் நடித்த ஜெய், சிவா, விஜயலட்சுமி, பிரேம்ஜி உள்பட பலர் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர்.

 
இந்நிலையில் இந்த படத்தின் தென்காசி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டை அம்சமாக கொண்ட இந்த படத்தில் நிஜ கிரிக்கெட் வீரர்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க வெங்கட்பிரபு முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர்களான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முரளிவிஜய் ஆகியோர்களை இந்த படத்தின் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருவரும் பிசியாக இருப்பதால், இந்த போட்டிகள் முடிவடந்தவுடன் 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர்கள் நடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் குறித்த ஒரு பாடலும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
 
யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை வெங்கட்பிரபு தயாரித்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz