விலகி கொள்ளுங்கள் விஜய்சேதுபதி: முரளிதரன் கடிதத்திற்கு மக்கள் செல்வனின் பதில்!

தன்னுடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள் என முத்தையா முரளிதரன் கடிதம் ஒன்றை எழுதி நிலையில் அந்த கடிதத்துக்கு ’நன்றி வணக்கம்’ என விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான ‘800’ திரைப்படத்தில் நடிக்க கூடாது என விஜய் சேதுபதிக்கு திரை உலகம் மற்றும் அரசியல்வாதிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் சற்று முன்னர் முத்தையா முரளிதரன் ஒரு நீண்ட கடிதத்தை எழுதி அதில் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முத்தையா முரளிதரனின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது

எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில்‌ சிலரால்‌ ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள்‌ காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்‌.

என்‌ மீதுள்ள தவறான புரிதலால்‌ 800 படத்தில்‌ இருந்து விலக வேண்டும்‌ என நடிகர்‌ விஜய்‌ சேதுபதி அவர்களுக்கு சிலர்‌ தரப்பில்‌ இருந்து கடுமையான அழுத்தம்‌ தருவதை நான்‌ அறிகிறேன்‌ எனவே என்னால்‌ தமிழ்‌ நாட்டின்‌ ஒரு தலைசிறந்த கலைஞன்‌ பாதிப்படைவதை நான்‌ விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய்‌ சேதுபதி அவர்களின்‌ கலை பயணத்தில்‌ வருங்காலங்களில்‌ தேவையற்ற தடைகள்‌ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு இத்திரைப்படத்தில்‌ இருந்து விலகிக்‌ கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன்‌.

ஒவ்வொரு முறை எனக்கு ஏற்படும்‌ தடைகளால்‌ ஒருபோதும்‌ நான்‌ சோர்ந்துவிடவில்லை அதை அனைத்தையும்‌ எதிர்கொண்டு வென்றே இந்த நிலையை என்னால்‌ எட்ட முடிந்தது. இத்திரைப்படம்‌ எதிர்கால தலைமுறையினருக்கும்‌ இளம்‌ கிரிக்கெட்‌ வீரர்களுக்கும்‌ ஒரு, உத்வேகத்தையும்‌ மன உறுதியையும்‌ அளிக்கும்‌ என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்‌ அதற்கும்‌ இப்போது தடைகள்‌ ஏற்பட்டிருக்கிறது . நிச்சயமாக இந்த தடைகளையும்‌ கடந்து இந்த படைப்பை அவர்களிடத்தில்‌ கொண்டு சேர்ப்பார்கள்‌ என நம்புகிறேன்‌. இதற்கான அறிவிப்பு விரைவில்‌ வரும்‌ என தயாரிப்பு நிறுவனம்‌ என்னிடம்‌ உறுதி அளித்துள்ள நிலையில்‌ அவர்கள்‌ எடுக்கும்‌ அனைத்து முயற்சிகளுக்கும்‌ உறுதுணையாக இருப்பேன்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இத்தகைய சூழ்நிலையில்‌ எனக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும்‌ அரசியல்‌ பிரமுகர்களுக்கும்‌ தமிழ்‌ திரைப்பட கலைஞர்களுக்கும்‌ விஜய்‌ சேதுபதியின்‌ ரசிகர்களுக்கும்‌
பொதுமக்களுக்கும்‌ குறிப்பாக தமிழக மக்களுக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு முத்தையா முரளிதரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த விஜய்சேதுபதி, ‘நன்றி வணக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகிவிட்டதாக கருதப்படுகிறது

More News

வெறுப்பாகிய வேல்முருகன்: நின்னு விளையாடும் நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படுகிறது. அதில் அறந்தாங்கி நிஷா 3 பேரின் பெயர்களை சொல்லத் தயங்க,

கொரோனா நேரத்தில் செய்தித்தாள் படிப்பது பாதுகாப்பனதா??, மத்திய அரசு அளித்த புதிய விளக்கம்!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் புதிய தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே

பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை… ஆன்லைன் சூதாட்டத்தால் நேர்ந்த கொடுமை!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வியாபாரி ஒருவர் பல லட்சங்களை இழந்து அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் தீக்குளித்து தற்கொலை

பயிற்சி மையம் பக்கமே போகல… நீட் தேர்வில் வெற்றிபெற்ற மதுரை மாணவியின் புதிய அனுபவம்!!!

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக சில மாணவர்கள் மாதக்கணக்கான பயிற்சி மையத்தில் செலவழித்து வருகின்றனர்.

சினிமா இல்லை என்றால் செத்து விடுவோம்: பிரபல தமிழ் இயக்குனர்

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக சினிமா துறையே முடங்கி உள்ளது என்பதும் திரைப்பட படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்தாலும் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதற்கு