அம்மாவுக்கும் மகளுக்கும் தனித்தனி கள்ளக்காதலன்கள்: கொலையில் முடிந்த விபரீதம்
வேலூரை சேர்ந்த மக்கான் என்பவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்கானுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணின் மகள், பரத் என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது.
அம்மா மகள் என தனித்தனியே இருவரும் மாறி மாறி அவரவர் கள்ள காதலனுடன் ஜாலியாக இருந்த நிலையில் இரண்டு கள்ளக்காதலர்களூக்கு இடையே பிரச்சினை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் மகளுடன் கள்ளக்காதல் வைத்திருந்த பரத் என்பவர் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினார்.
கிரகப்பிரவேசம் முடிந்தவுடன் அவர் வெளியே சென்றபோது மைக்கேல் அவரிடம் தகராறு செய்ததாகவும் இதையடுத்து இருவரும் நடுரோட்டில் கட்டிப்பிடித்து உருண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்கான் ஒரு இரும்பு கம்பியை எடுத்து பரத்தை சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக தெரிகிறது.
கிரகப்பிரவேசம் முடிந்த ஒரு சில மணிநேரங்களிலேயே பரிதாபமாக பரத் பலியானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மா மகள் என இருவரும் மாறி மாறி கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் பரிதாபமாக ஒரு உயிர் பலியாகி உள்ளது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.