close
Choose your channels

வடிவேலுவுடன் சந்தோஷ் நாராயணன் குடும்பத்தினர்: வைரல் புகைப்படங்கள்

Friday, September 17, 2021 • தமிழ் Comments

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பதும், அவர் நடிக்க உள்ள திரைப்படத்தை சுராஜ் இயக்க இருக்கிறார் என்பதும், லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவின் தீவிர ரசிகரான சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கம்போஸ் செய்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வடிவேலுவுடன் சந்தோஷ் நாராயணன் குடும்பத்தினர் சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது. குறிப்பாக பாடகி ‘தீ’ உடன் வடிவேலு இருக்கும் புகைப்படம் தீயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேல் உடனான இந்த சந்திப்பு, சந்தோஷ் நாராயணன் குடும்பத்தினர்களூக்கு நிச்சயம் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz