அவர் என்னை அணைத்த போது என் உடல் புல்லரித்தது: ரஜினி சந்திப்பு குறித்து அபிஷன் ஜிவிந்த்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இளம் இசையமைப்பாளர் அபிஷன் ஜிவிந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அபிஷன் ஜிவிந்த். இந்த படத்தை மட்டுமல்லாமல், இதன் இசையையும் பலர் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், அபிஷன் ஜிவிந்த்ம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்து அபிஷன் ஜிவிந்த், தனது சமூக வலைத்தளத்தில், "நான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்ததன் காரணம் இன்று நிறைவடைந்ததாக உணர்கிறேன். அவர் என் பெயரை சொல்லி என்னை அணைத்தபோது, என் உடம்பெல்லாம் புல்லரித்தது. நான் சிறு வயதில் செய்த ஒவ்வொரு பிரார்த்தனையும் எனக்குக் கிடைத்தது போலவும், அது எனக்குத் தேவையான நேரத்தில் சரியாக வந்துவிட்டது போலவும், அவரது புன்னகையிலிருந்து எனக்குத் தெரிந்தது.
என்ன ஒரு மனிதர்! எளிமையின் சின்னம்! இந்த தருணத்தைவிட பெரிய உந்துதலோ அல்லது ஆசீர்வாதமோ எனக்கு கிடைக்க முடியாது. என்றென்றும் அவரை நான் நேசிக்கிறேன். என் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள்," என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
The very reason I stepped into cinema feels fulfilled today. The way he called my name and hugged me - goosebumps all over. His one smile felt like every prayer I made as a child had finally arrived late but exactly WHEN I NEEDED IT. What a man, what a symbol of simplicity. pic.twitter.com/VYfDfOcdeV
— Abishan Jeevinth (@Abishanjeevinth) June 15, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments