close
Choose your channels

ரஜினியின் 'பாபா' படத்தில் அனிருத்? ஆச்சரியமான தகவல்!

Friday, November 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு உருவான ‘3’ என்ற படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ’பாபா’ படத்திலேயே அனிருத் இடம் பெற்றுள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியது. ஆனால் இந்த படமும் வசூல் அளவில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் ’பாபா’ படத்தை மறுபடியும் எடிட்டிங் செய்து டிஜிட்டல் மயமாக்கி மீண்டும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’பாபா’ படத்தில் ஒரு பாடலில் குழந்தை நட்சத்திரமாக அனிருத் டான்ஸ் ஆடி உள்ள தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். எனவே அனிருத்தின் முதல் படம் ’பாபா’ என்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.