close
Choose your channels

இசையமைப்பாளர் டி.இமான் திருமணம்: மணமகளுடன் புகைப்படம் வைரல்!

Sunday, May 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்து கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் டி இமான், மோனிகா ரிச்சர்ட்ஸ் என்பவரை கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் டி இமான் விரைவில் மறுமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் திருமணம் செய்துகொண்டார். மணப் பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .

நடிகை சங்கீதா, அவரது கணவர் கிரிஷ், குட்டிபத்மினி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.