தனுஷின் D50 படத்தில் வில்லனாக நடிக்க முடியாது என கூறிய இசையமைப்பாளர்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,September 02 2023]

நடிகர் தனுஷ் தற்போது இயக்கி வரும் D50 என்ற திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவரை வில்லனாக நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அவர் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

நடிகர் தனுஷ் தற்போது இயக்கி, நடித்து வரும் D50 என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் போடப்பட்ட பிரமாண்ட செட்டில், 400க்கும் மேற்பட்ட துணை நடிகர்களுடன் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அக்டோபர் வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு தனுஷ் சமீபத்தில் போன் செய்து ’D50' படத்தில் நீங்கள் தான் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது தேவா ’என்னை எப்படி நீங்கள் தேர்வு செய்தீர்கள்’ என கேட்டதற்கு ’வடசென்னை ஸ்லாங் உங்களுக்கு தான் சரியாக வரும், எனவே நீங்கள் இந்த படத்தில் நடித்த நன்றாக இருக்கும்’ என்று கூறினார்.

ஆனால் D50 படத்தில் நடிக்க தேவா மறுத்துவிட்டார். ’என்னால் வசனங்களை ஞாபகம் வைத்து பேச முடியாது, அதனால் அதிக டேக்குகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது, இதனால் என்னால் படப்பிடிப்பு தாமதம் ஆகலாம்’ என்று தேவா கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து தனுஷ், ‘பரவாயில்லை ஓகே சார்’ என்று கூறியதாக ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

More News

ரஜினியை திடீரென சந்தித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்.. அரசியல் ஆலோசனையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆர்எஸ் சிவாஜி காலமானதையடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக

நீச்சல் குளத்தில் ஜாலியாக சமந்தா.. கலிபோர்னியா ஜாலி புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா, விஜய் தேவரகொண்டா உடன் நடித்த 'குஷி' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.

இந்த நாட்டோட பிரதான பிரச்சனையே எங்க கல்யாணம் தான்.. திருமண நாளில் ரவீந்தரின் நெகிழ்ச்சிப்பதிவு..!.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், கடந்த ஆண்டு இதே நாளில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூர்யாவின் 'கங்குவா' படத்தின் சூப்பர் அப்டேட்.. வைரல் புகைப்படம்.!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். குறிப்பாக கொடைக்கானலில் பிளாஷ்பேக்