விஜய்யை இனி யாரும் தடுக்க முடியாது.. அரசியல் எண்ட்ரி குறித்து பிரபல இசையமைப்பாளர்..!

  • IndiaGlitz, [Thursday,February 01 2024]

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து திரை உலக சிலர் நெகட்டிவ்வாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விஜய்யை இனி யாராலும் தடுக்க முடியாது என பாசிட்டிவாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூலில் இதுகுறித்து கூறியிருப்பதாவது;

தமிழக அரசியலில் இன்னொரு புதுமுகம். சில ஆண்டுகளுக்கு முன் யாரும் நினைத்துப் பார்த்தது கூட இல்லை, நடிகர் விஜய் தீவிர அரசியலுக்குள் இறங்குவார் என்று. வழக்கமான நடிகனுக்கு என்ன தெரியும் அரசியலைப் பற்றி? விமர்சனங்கள் வலம்வரத் தொடங்கி விட்டன.

மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற தூண்டல் பல்வேறு துறைகளில் இருக்கிற பலருக்கும் ஒரு கட்டத்தில் வருவதுண்டு. அது வந்துவிட்டது இவருக்கு. அவ்வளவுதான்! அந்த துளைப்பு வந்துவிட்ட விஜய்யை இனி யாரும் தடுக்க முடியாது.

நூற்றுக்கணக்கான கோடிகளில் வருமானம் பார்க்கிற, உச்சத்திலுள்ள ஒரு நடிகர் தன் தொழிலுக்கே ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு செயலில் அவ்வளவு எளிதாக இறங்கிவிடுவாரா? எவ்வளவு எண்ணங்கள் ஓடியிருக்கும்? அதற்குப் பின்பும் அவர் இதில் இறங்குகிறார் என்றால், தன் தொழிலைத் தாண்டி இந்தப் பயணம் இவருக்கு முக்கியமானதாக தெரிகிறதென்றால் அந்த உந்துதல் உண்மைதானே?
இது என் புரிதல்.

வல்லரசு நாடான ரஷ்யாவை துணிவுடன் எதிர்த்து நின்று ஓராண்டுக்கும் மேலாக கடுமையாகப் போரிட்டு வரும் குட்டி நாடான உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி ஒரு காமெடி நடிகர் தானே!

நடிகர், தயாரிப்பாளர் என்று இருந்தவர் திடீரென ஒரு நாள் தேர்தலில் நிற்க போகிறேன் என்று அறிவித்தவரைத்தானே அந்த நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? அவர்கள் தீர்ப்பு மிகச்சரி என்று தொடர்ந்து தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்து வருகிறாரே! புட்டினுக்கே சிம்மசொப்பனமாக விளங்குகிறாரே!

நோக்கம் சரியாக இருந்தால் மற்றவை சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. பார்க்கலாம்!

More News

படம் முடிந்தவுடன் 5 நிமிடங்கள் விடாமல் எழுந்த கைதட்டல்கள்.. கலைப்புலி எஸ். தாணு வாழ்த்து..!

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஒருங்கிணைத்து ரோட்டர்டம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில் படம் முடிந்ததும்

ரஷ்யா செல்லும் முன் திடீரென அமெரிக்காவுக்கு பறந்த கமல்ஹாசன்.. என்ன காரணம்?

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்ஃலைப்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஷ்யா செல்லும்

'கடவுள் எனக்கு அனுப்பி வைத்த முதல் குட்டி நண்பன்': பிறந்த நாள் வாழ்த்து கூறிய அட்லி..!

 பிரபல இயக்குனர் அட்லி தனது மகனின் முதலாவது பிறந்தநாள் குறித்த பதிவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து, 'கடவுள் எனக்கு அனுப்பிய முதல் குட்டி நண்பன்' என்று நெகிழ்ச்சியுடன்

கதையுடன் வந்தால் முழு படத்துடன் போகலாம்..  அஜித் பட தயாரிப்பாளரின் பிரமாண்டமான திட்டம்..!

 அஜித் பட தயாரிப்பாளர் பிரமாண்டமான திரைப்பட நகரத்தை உருவாக்க இருப்பதாகவும் இந்த திரைப்பட நகருக்குள் கதையுடன் வந்தால் திரும்பிப் போகும் போது முழு படத்துடன் செல்லலாம் என்று

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.. தர்ஷாவின் கிராமத்து கெட்டப் போட்டோஷூட்..!

நடிகை தர்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை' என்ற கேப்ஷனுடன் கிராமத்து  காஸ்டியூமில் உள்ள போட்டோஷூட் புகைப்படங்களை