கீர்த்திசுரேஷின் அடுத்த படம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட 'தளபதி 65' இசையமைப்பாளர்

  • IndiaGlitz, [Sunday,July 05 2020]

நடிகையர் திலகம் என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ’பெண்குயின்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவருடைய அடுத்தப் படமும் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மிஸ் இந்தியா’. தமிழ் உள்பட நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினர் விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’மிஸ் இந்தியா’ படத்தின் பின்னணி இசை பணிகளை தொடங்கி விட்டதாகவும், விரைவில் அந்த பணிகளை முடித்து விடுவதாகவும் அறிவித்துள்ளார். இவர்தான் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ படத்தின் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’மிஸ் இந்தியா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில் அடுத்த பாடலை விரைவில் எதிர் பாருங்கள் என்றும் எஸ்.தமன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

ஈஸ்ட் கோஸ்ட் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நரேந்திர நாத் இயக்கியுள்ளார். கீர்த்திசுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, நதியா, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

More News

நுழைவாயில் முதல் பாத்ரூம் வரை முழுக்க முழுக்க தங்கம்: வியட்நாம் தங்க ஹோட்டலின் ஆச்சரிய புகைப்படங்கள்!

வியட்நாமில் டன் கணக்கில் தங்கத்தினால் முலாம் பூசப்பட்டு உருவாக்கப்பட்ட ஹோட்டல் ஒன்று புதிதாக திறக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

மத போதகரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேர்: கொரோனா அச்சத்தால் 3 கிராமங்களுக்கு சீல் 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் மாஸ்க் அணிய வேண்டும்,

வொர்க் ஃப்ரம் ஹோமில் இவ்வளவு சின்சியரா? மணமேடையிலும் லேப்டாப்பில் வொர்க் செய்யும் மணமகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே வொர்க் ஃபிரம் ஹோம்

டிக் டாக் தடையால் மனநிலை பாதிப்படைந்த பிரபலம்: பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்

இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கின் ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவின் 59 செயலிகள் சமீபத்தில் தடை செய்யப்பட்டது.

சுஷாந்தின் பெண் மேனேஜர் வயிற்றில் பிரபல நடிகரின் குழந்தையா? அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி பாலிவுட் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.