இசையமைப்பாளர் தமனுக்கே தெரியாமல் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி.. களைகட்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி..!

  • IndiaGlitz, [Friday,August 25 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக நடுவரில் ஒருவராக கலந்து கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தமன் இந்த நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவில் மிகவும் ஜாலியாகவும் கலகலப்பாகவும் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் இருந்த நடுவர்கள் பாடலை பாடிய பாடகர்களின் திறமையை மட்டும் பாராட்டி விட்டு இறுக்கமாகவே இருப்பார்கள். ஆனால் தமன் பாடகர் பாடகிகள் மட்டுமின்றி தொகுப்பாளர்களிடம் சக நடுவர்களிடமும் அவர் கலகலப்பாக பேசி வருவது நிகழ்ச்சியை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண் பார்வையற்ற சிறுமி புரோகித ஸ்ரீ பாடியதை கேட்டு ஆச்சரியமடைந்த அவர், கண்டிப்பாக உங்களுக்கு கண் பார்வை கிடைக்க அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதி அளித்தார். அதேபோல் கானா பாடிய சிறுவனுக்கு தனது படத்தில் வாய்ப்பு அளித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது சக நடுவரான ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல் ‘ரஞ்சித் மே ரஞ்சிதமே’ பாடலை சிறப்பாக பாடிய கௌரவ் என்ற சிறுவனிடம், அனிருத் மற்றும் விஜய்யிடம் கூட்டி போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இப்படி கலகலப்பாகவும் ஜாலியாகவும் நிகழ்ச்சியை கொண்டு சென்று கொண்டிருந்த நிலையில் தமனின் மனைவி அவருக்கே தெரியாமல் இந்த நிகழ்ச்சியில் சர்ப்ரைஸ் ஆக கலந்து கொண்டது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி தமன் குறித்த சில பர்சனல் விஷயங்களையும் அவரது மனைவி இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றுதான் ஓய்வு நேரத்தில் தமன், நிகழ்ச்சி தொகுப்பாளர் மாகாபாவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியதாக கூறியுள்ளார். மொத்தத்தில் தமனின் வருகை காரணமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி களைகட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்த விருது மிகப்பெரிய ஊக்கம்.. 'கடைசி விவசாயி' இயக்குநர் ம. மணிகண்டன் நன்றி கடிதம் !

நேற்று 69 வது தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழில் வெளியான 'கடைசி விவசாயி' என்ற திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. இதனை அடுத்து இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் தனது நன்றியை

தேசிய விருது பெற்ற ஒரே ஒருவருக்கு மட்டும் வாழ்த்து சொன்ன கமல்ஹாசன்..! என்ன காரணம்?

69 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தேசிய விருதுகள் பெற்ற ஒரே ஒருவருக்கு மட்டுமே உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு தேசிய விருதா? தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்.!

 69 வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழில் எதிர்பார்த்த சில படங்கள் விருதுகள் கிடைக்காமல் இருந்தது தமிழக திரை உலகிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

49 வருடத்தில் இதுதான் மோசமான அனுபவம்.. ஷங்கர், மணிரத்னம் பட ஒளிப்பதிவாளர் ஆதங்கம்..!

 தன்னுடைய 49 வருடத்தில் இதுதான் மோசமான அனுபவம் என சென்னை விமான நிலையத்தில் தனக்கு நிகழ்ந்தது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் தெரிவித்துள்ளார்.  

சிறந்த படம், சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு.. தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

69வது தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதில்  தமிழ் படங்களுக்கு சில