விஜய் 61 படத்தின் இசையமைப்பாளர் யார்?

  • IndiaGlitz, [Tuesday,November 08 2016]

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார்? என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'விஜய் 61' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமானதான செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி 'விஜய் 61' குழுவினர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
'விஜய் 61' படத்திற்கு இசையமைப்பது யார்? என்று விஜய் ரசிகர்கள் உள்பட அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பாட்ஷா'வுடன் கனெக்சன் ஆகும் ரஜினி-ரஞ்சித் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலகம் முழுவதும் சாதனை வசூல்...

விஜய்சேதுபதியின் முதல் தெலுங்கு படம்

இந்த ஆண்டில் விஜய்சேதுபதி நடித்த ஆறு படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் அவர் நடித்த 'புரியாத புதிர்' வெளியாகவுள்ளது...

சூர்யாவின் 'எஸ் 3' டீசர் விமர்சனம்

சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 'எஸ்3' படத்தின் டீசர் சற்று முன் வெளியாகியுள்ளது...

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஹாலிவுட் வில்லன்?

தனுஷ் நடித்த 'கொடி' வெற்றிப்படமாக உருவாகியுள்ள நிலையில் தற்போது அவர் 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை'...

ஜெயம் ரவி-விஜய் படத்தில் சென்னையின் பிரபல தொழிலதிபர்

இயக்குனர் விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படம் மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே...