என் வயது முக்கியமில்லை.. மக்களுக்காக நான் செய்யும் பணி தான் முக்கியம்..! அமித்ஷாவுக்கு ம.பி முதல்வர் பதிலடி.

  • IndiaGlitz, [Monday,January 13 2020]

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் அதே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறது பா.ஜ.க.

மத்திய பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா மத்திய பிரதேச முதல்வர் மாநில பிரச்சனைகளை பார்க்காமல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசுகிறார். இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள் உங்கள் வயதிற்கு நல்லதில்லை என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள கமல்நாத், ''எங்கள் அரசின் சிறந்த செயல்பாடுகளை ஒரு வருடத்தில் காட்டியுள்ளோம். 365 நாள்களில் செய்ய வேண்டிய வாக்குறுதிகளை 265 நாள்களில் செய்து முடித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.

நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர, என் வயதை இல்லை. பல இளம் பா.ஜ.க தலைவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து இந்த வயதிலும் மக்கள் என்னை நம்புகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

More News

கேபிள் டிவியில் ஒளிபரப்பான 'தர்பார்': அதிர்ச்சியில் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கடந்த நான்கு நாட்களில் 128 ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதை மட்டும் என்னை யாராலும் செய்ய வைக்க முடியாது: வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

'அசுரன்' பட விழாவில் கிண்டலடிக்கப்பட்ட விஜய்: நாகரீகமாக நடந்து கொண்ட தனுஷ்!

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை...! ம.பி முதல்வரை எச்சரித்த அமித்ஷா.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் எனக் கமல்நாத், உரத்த குரல் எழுப்புகிறார். கமல்நாத் ஜி, நீங்கள் குரல் எழுப்புவதற்கான வயது இது இல்லை. கத்த வேண்டாம்.

நீங்கள் ஒரு முட்டாள்..! பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள ஆஸ்திரேலிய மக்கள்.

காட்டுத்தீயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களான நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பாதிப்புகளை பார்வையிட்டு வரும் மோரிசன் மக்களால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு எதிர்க்கப்பட்டு வருகிறார்.