தற்கொலை செய்யுமளவுக்கு என் அப்பா கோழை இல்லை..! அம்ருதா.

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

தெலுங்கானாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த ப்ரணய் குமாரும் அதே பகுதியை சேர்ந்த அம்ருதாவும் 2018ம் ஆண்டு காதலித்து கல்யாணம் செய்தனர். இருவரும் வேறு வேறு சாதி என்பதால் தொடக்கம் முதலே இவர்களது காதலுக்கு அவர்களது தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

2018 செப்டம்பர் மாதம் அம்ருதா கருவுற்றிருந்தார். மருத்துவ பரிசோதனைக்காக வெளியில் சென்ற போது அம்ருதாவின் கண் முன்னே ப்ரணய் குமார் கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த ஆணவக் கொலையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், அவரது சித்தப்பா, பீகாரைச் சேர்ந்த கூலிப்படையினர் என ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயில் வாழ்க்கைக்கு பின் ஜாமினில் வந்த மாருதி ராவ் இரண்டு நாட்களுக்கு முன் ஆர்யா வைஷ்ய பவன் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அவர் கடைசியாக அம்ருதா அம்மாவிடம் செல் என எழுந்தியிருந்தார். தனது தந்தையின் உடலை பார்க்க வந்த அம்ருதாவை அவரது தாயும் உறவினர்களும் திட்டினர். பார்க்க அனுமதிக்கவுமில்லை.

இந்நிலையில் தந்து தந்தையின் இறப்பு பற்றி பேட்டி கொடுத்த அம்ருதா, என் அப்பாவுக்கு எதிராக நான் எதுவுமே செய்ததில்லை. என் கணவரை கொன்றதால் தான் அவருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தேன். ஆனாலும் அவரை எனக்கு தெரியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்க்கு அவர் கோழை இல்லை. சொத்து பிரச்சனை காரணாமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

நான் ப்ரணையை திருமணம் செய்தால் சொத்தையெல்லாம் தன் பேருக்கு எழுதிக் கொடுக்குமாறு எனது சித்தப்பா ஷ்ரவன் குமார் சொல்லியுள்ளார். இது விஷயமாக ஏற்கனவே எனது அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் தகராறு ஏற்பட்டது. என் அம்மா கூட மிரட்டப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார். இந்த தற்கொலை தொடர்பாக தெலுங்கானா காவல்துறையானது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.