எனது கனவு நனவானது: ஜிவி பிரகாஷின் 'சர்வதேச' தகவல்

  • IndiaGlitz, [Friday,August 28 2020]

கோலிவுட் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரண்டு துறையிலும் பிசியாக இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ் என்பது தெரிந்ததே. அவர் தற்போது ஒரே நேரத்தில் சுமார் ஒன்பது படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தற்போது தயாராகி கொண்டு வருகிறது. இது குறித்து ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’என்னுடைய முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகப் போகிறது. ’கோல்ட் நைட்ஸ்’ என்ற டைட்டில் கொண்ட இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது’ என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆல்பத்திற்கு ஜீவி பிரகாஷ் இசை அமைத்துள்ள நிலையில் பிரபல கனடா நாட்டின் பாடகி ஜூலியா கர்தா அவர்கள் பாடியுள்ளார். இந்த சர்வதேச ஆல்பத்திற்காக ஜிவி பிரகாஷின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

More News

ஸ்ரீகாந்த் ஜோடியாக 'தடம்' பட நடிகை: டைட்டில் அறிவிப்பு

'ரோஜா கூட்டம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஏப்ரல் மாதத்தில்' 'போஸ்' 'கனா கண்டேன்' 'மெர்குரி பூக்கள்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.

கல்வித்துறையில் முன்னோடியாக விளங்கும் தமிழகம்!!! அதிரடி திட்டங்கள்!!!

உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை விகிதத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்து இருக்கிறது

முதல்முறையாக 2வது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்த பிரபல நடிகை: நெட்டிசன்கள் வாழ்த்து

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த 'என்னவளே' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ஆனந்தம்' 'ஏப்ரல் மாதத்தில்' 'விரும்புகிறேன்' 'வசீகரா' 'ஜனா' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா

மன்னிப்பு கேட்காவிட்டால் கைது செய்வோம்: தமிழ் நடிகருக்கு காவல்துறை எச்சரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தேசியக்கொடி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார்

கல்லூரி இறுதியாண்டு தேர்வு… சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!!!

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது