என் இதயம் மெரீனாவில்தான் உள்ளது. மருத்துவமனையில் இருந்து ராகவா லாரன்ஸ் தகவல்

  • IndiaGlitz, [Monday,January 23 2017]

சென்னை மெரீனாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்பட பல வசதிகளை தனது சொந்த செலவில் செய்து கொடுத்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் நடிகர் ராகவா லாரன்சுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய போதிலும் மீண்டும் மெரீனாவின் போராட்டக்களத்திற்கு வந்து தனது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் போராட்ட களத்தில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் காய்ச்சல் மற்றும் கழுத்துவலி காரணமாக ராகவா லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து கொண்டே ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'இப்போது உங்களுடன் என்னால் மெரினாவில் இருக்க முடியவில்லை. கழுத்துவலி மற்றும் காய்ச்சல் காரணமாக, என்னால் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் போய்விட்டது. எனது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும் பட்சத்தில், இன்று மீண்டும் கண்டிப்பாக மெரினா வருவேன். நான் இப்போது மருத்துவமனையில் இருந்தாலும், எனது இதயம் மெரினாவில் உங்களுடன்தான் இருக்கிறது'' என்று உணர்ச்சி பெருக்குடன் கூறியுள்ளார்.,

ராகவா லாரன்ஸ் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More News

மெரீனாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கம். திருவல்லிக்கேணியில் போலிசார் தடியடி.

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டாவைத் தடை செய்யக்கோரியும் கடந்த ஏழு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சென்னை காவல்துறையினர் அப்புறப்படுத்தி வெளியேற்றி வருகின்றனர்.

இளையதளபதியின் 'பைரவா' சென்னை வசூல் குறித்த தகவல்

ஒவ்வொரு வாரமும் சென்னை பாக்ஸ் ஆபிஸ் விபரங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்ததால் திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

நானும் தமிழ் பொறுக்கிதான். ஆனால் டெல்லியில் பொறுக்க மாட்டேன். கமல்ஹாசன்

கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலக நாயகன் கமல்ஹாசன் தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தமிழர்களை பொறுக்கி என கூறிய பாஜக தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியம் சுவாமிக்கு நேற்று நடந்த விழா ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார்.

பீட்டா ராதாராஜனுக்கு நடிகர் சதீஷ் பதிலடி

நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார்...

மாணவர்களின் தொடர் போராட்டம் எதிரொலி. சென்னை திரும்புகிறார் முதல்வர்

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் ஜல்லிக்கட்டு அமைப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அவர் சென்னை திரும்புகிறார்...