ஜிவி பிரகாஷ் படத்தில் இணைந்த இயக்குனர் மிஷ்கின்?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
நடிகர் ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று ’பேச்சிலர்’. இந்த படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ’சவரக்கத்தி’ ’சூப்பர் டீலக்ஸ்’ ’சுட்டு பிடிக்க உத்தரவு’ போன்ற தான் இயக்காத திரைப்படத்திலும் மிஷ்கின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷின் படத்திலும் மிஷ்கின் நடிக்க உள்ளார்
இந்த நிலையில் மிஷ்கினின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் அருண் விஜய்யும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அருண்விஜய் மற்றும் சிம்பு ஆகியோர் இணைந்து ’செக்க சிவந்த வானம்’ என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments