close
Choose your channels

விடுமுறை நாளில் ரிலீஸாகும் மிஷ்கினின் 'பிசாசு 2': தேதி அறிவிப்பு!

Wednesday, July 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிசாசு 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’பிசாசு 2’. இந்த படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் வெற்றிப்படமான ’பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனை அடுத்து சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

’பிசாசு 2’ படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் அஜ்மல், பூர்ணம், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் மிஷ்கினின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.