பாத்டேப்பில் தொங்கும் கால்கள், கையில் சிகரெட்: மிஷ்கின் ஸ்டைலில் 'பிசாசு 2' ஃபர்ஸ்ட்லுக்!

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’பிசாசு’ திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ’பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மிஷ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் பூர்ணா பிசாசு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் ராஜா இசையில் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண்ட்ரியாவின் கால்கள் பாத்டேப்பில் தொங்கி இருப்பது போன்றும் கையில் சிகரெட் வைத்து இருப்பது போன்றும் மிஸ்கின் சாயலில் இருப்பதை பார்க்கும்போதே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.