40 கோடி கேட்கவில்லை, 400 கோடி கேட்டேன்: மிஷ்கின் அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,February 24 2020]

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. லண்டனில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென இந்த படத்தை முடிக்க மேலும் ரூபாய் 40 கோடி விஷாலிடம் மிஸ்கின் கேட்டதாகவும் இதனை அடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து மிஸ்கின் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள படத்தை விஷாலே இயக்குவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மிஸ்கின் ’நான் விஷாலிடம் 40 கோடி கேட்டதாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை. உண்மையில் நான் அவரிடம் ரூ. 400 கோடி கேட்டேன். இதுவரை படமாக்கப்பட்ட 50% சதவீத படப்பிடிப்புக்கு 100 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. மீதமுள்ள காட்சிகளை படமாக்க வேண்டும் என்றால் 400 கோடி ரூபாய் தேவை.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் சேட்டிலைட்டில் இருந்து குதிக்கும் படியான காட்சிகள் அமைக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு மட்டுமே ரூபாய் 100 கோடி செலவாகும் எனவே மொத்தம் 400 கோடி நான் அவரிடம் கேட்டேன் என்று கிண்டலாக பதில் கூறியுள்ளனர்

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால் ’மீதமுள்ள படத்தை நானே இயக்கப் போவதாக வெளிவந்துள்ள செய்தி உண்மைதான்’ என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நீண்ட இடைவேளைக்குப் பின் சிம்பு படத்தில் பாடல் பாடும் பிரபலம்!

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை பார்த்தோம் 

தடைகளை தகர்த்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட ஜீவா படம்!

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா நடிப்பில் இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'ஜிப்ஸி'.

தமிழ் சினிமாவில் முதல்முறை: விஜய்யின் மாஸ்டர் குறித்த ஆச்சரிய தகவல்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில்

'இந்தியன் 2' விபத்து: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து கொண்டிருந்தபோது

டொனால்ட் டிரெம்ப் லைக் செய்த பாகுபலி வீடியோ! உலகம் முழுவதும் வைரல்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாளை இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் நிலையில் தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றுக்கு அவர் லைக் செய்து உள்ளார்