இரண்டு இசை மேதைகளை 'பிசாசு 2' படத்தில் பயன்படுத்தி கொண்ட மிஷ்கின்!

  • IndiaGlitz, [Saturday,February 05 2022]

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் தற்போது ‘பிசாசு 2’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பிசாசு என்ற படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘பிசாசு 2’ படத்தில் இரண்டு இசை மேதைகளை பயன்படுத்தியுள்ளதாக மிஷ்கின் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் டிரெம்பெட் இசைக்கலைஞர் மாக்ஸ்வெல் ராஜன். இவர் இசைஞானி இளையராஜாவிடம் பல வருடங்கள் பணிபுரிந்தவர் என்பதும், ‘மெளனராகம்’ படத்தில் இடம்பெற்ற ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ என்ற பாடலுக்கு டிரெம்பெட் இசை அமைத்தவர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்னொருவர் சாக்ஸ்போன் இசைக்கலைஞர் சாக்ஸ் ராஜா. இவர்கள் இருவருடைய இசை வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள மிஷ்கின், இந்த இரு இசை மேதைகளுடன் ‘பிசாசு 2’ படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார்.

 

More News

சொந்த கணவரையே ஆன்லைனில் ஏலம்விட்ட இளம்பெண்… சூடுபிடித்த போட்டி!

விசித்திரத்திற்கு பஞ்சமில்லாதது என்றால் அது உண்மையில் சமூகவலைத் தளங்கள்தான்.

நயன்தாராவுடன் லாங் ஹாலிடே டூர்: விக்னேஷ் சிவன் திட்டம்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம்

'நண்பன்' படத்தில் பார்த்த 'ஒல்லிபெல்லி' இலியானாவா இவர்? கிளாமர் புகைப்படம் வைரல்!

விஜய் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'நண்பன்' என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை இலியானா. இவர் இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்களை

சமந்தாவின் தீவிர ரசிகையை அறிமுகம் செய்து வைத்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில் சமந்தாவின் தீவிர ரசிகை ஒருவரை கீர்த்தி சுரேஷ் அறிமுகம்

பிக்பாஸ் அல்டிமேட்: தாமரையை கண்ணீர் விட வைத்த பட்டம்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் குண நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பட்டம் கொடுக்கப்பட்டு வருகிறது.