close
Choose your channels

'லியோ' படத்தில் நடிக்கும் மிஷ்கின், கெளதம் மேனனுக்கு இவ்வளவு சம்பளமா?

Sunday, February 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய்தத் சம்பளம் 10 கோடி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ’லியோ’ படத்தில் நடிப்பதற்காக மிஷ்கின் நாள் ஒன்றுக்கு ரூபாய் பத்து லட்சம் சம்பளம் வாங்குவதாகவும் அதேபோல் ஐந்து முதல் ஆறு லட்ச ரூபாய் கௌதம் மேனன் ஒருநாள் சம்பளமாக வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’லியோ’ படத்தின் நாயகியாக நடிக்கும் த்ரிஷா, அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டவரின் சம்பளம் குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos