close
Choose your channels

மிஷ்கின் படப்பிடிப்பில் மோதிக்கொண்ட இரண்டு நாயகிகள்: யார் யார் தெரியுமா?

Monday, January 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ’சைக்கோ’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. இந்த படத்தில் இரண்டு நாயகிகள் இருந்தபோதிலும் இரண்டு நாயகிகளும் சந்திக்கும் காட்சி ஒரே ஒரு காட்சி என்பதால் இருவரையும் இயக்குவதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று மிஷ்கின் ஒரு பேட்டியில் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் 'துப்பறிவாளன் 2’ படத்தில் ஆண்ட்ரியா மற்றும் அனு இமானுவேல் ஆகிய 2 நடிகைகளை இயக்கும் போது பல பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் தான் ஆத்திரமடைந்ததாகவும் அவர் கூறினார். உதாரணமாக 'துப்பறிவாளன் 2’ படத்தில் ஒரு காட்சியில் இருவரும் எஸ்கலேட்டரில் உட்கார்ந்து பேசும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஆண்ட்ரியா ஜீன்ஸ் மற்றும் டீ சர்ட் அணிந்திருந்தார். அனு இமானுவேல் குர்தா அணிந்திருந்தார். அப்போது ஆண்ட்ரியா, அனுவை பார்த்து உட்கார், உன் உடை சிக்கிக்கொள்ள போகிறது என்று கூறியுள்ளார். உடனே அதற்கு அனு, ‘உன் வேலையை பாரு எனக்கு தெரியும்' என்று கூற, இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக மிஷ்கின் தனது பேட்டியில் கூறினார்.

உடனே தான் அனுவை நன்றாக திட்டியதாகவும், ஆண்ட்ரியா உன்னைவிட அதிக அனுபவம் உள்ளவர் அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டால் என்ன கூறியதாகவும் என் கையில் மட்டும் அப்போது ஏதாவது இருந்தால் அவர் மண்டையில் போட்டு உடைத்து இருப்பேன் என்றும் மிஸ்கின் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.