பாடல் வெளியீட்டுக்கு பதில் ஆக்சன் வெளியீட்டு விழா: மிஷ்கினின் வித்தியாசமான முயற்சி

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் தெரிவிக்கையில் ஹாலிவுட்டில் வெளிவரும் ஷெர்லாக் ஹோம்ஸ் படங்களுக்கு நிகரானது இந்த 'துப்பறிவாளன்; திரைப்படம் என்று கூறியுள்ளார். அவர் மேலும் இதுகுறித்து கூறியதாவது:

விஷால் துப்பறியும் பிரைவேட் டிடெக்டிவ் ஆபிசராக “ துப்பறிவாளன் “ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான துப்பறியும் படமாக இருக்கும். ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான “ ஷெர்லாக் ஹோம்ஸ் “ மற்றும் தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான “ துப்பறியும் சாம்பு “ போன்ற ஒரு கதையாக இப்படம் இருக்கும். தமிழில் துப்பறியும் கதைகள் அதிகம் வந்ததில்லை “ துப்பறிவாளன் “ நிச்சயம் தனித்துவமான படமாக இருக்கும்.

விஷால் இப்படத்தில் “ கணியன் பூங்குன்றன் “ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “ யாதும் ஊரே ; யாவரும் கேளீர் “ என்று பாடிய கவிஞர் “ கணியன் பூங்குன்றனார் “ அவர்களின் பெயரை தான் இப்படத்தின் கதாநாயகனுக்கு வைத்துள்ளேன். அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் பலமாக இருக்கும். படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள் , மெய்சிலிர்க்கவைக்கும் சண்டை காட்சிகள் , இதனோடு இணைந்து ஒரு மெல்லிய காதல் என அனைத்தும் கலந்த ஒரு படைப்பாக துப்பறிவாளன் இருக்கும். தெலுங்கில் பிரபலமான அனு இம்மானுவேல் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளது அதனால் இசை வெளியீட்டு விழாவை தவிர்த்து ஆக்சன் வெளியீட்டு விழா ஒன்றை நடத்தலாம் என்று முடிவுசெய்துள்ளோம். விஷாலும் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.

விஷால் என்னுடைய மனதுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் , அவர் என்னுடைய அன்பான தம்பி. நான் இதுவரை பணியாற்றிய கதாநாயகர்களில் விஷாலை போன்று எனக்கு மிகவும் நெருக்கமானவர் யாருமில்லை. நான் அவருடைய கருத்துக்களை ஏற்றுகொள்வேன் , அவரும் என்னுடைய கருத்துக்களை ஏற்றுகொள்வார்.


என்னுடைய படங்களில் ஒரு சின்ன கதாபாத்திரம் வந்தாலும் அது நிச்சயம் பேசப்படும் விதமாக இருக்கும். “ அஞ்சாதே “ படத்தில் பூ போட்டு செல்லும் அந்த பாட்டியில் ஆரம்பித்து நான் இயக்கிய பல படங்களில் இடம் பெற்ற சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஒரு காட்சியில் வந்தாலும் அதனுடைய வாழ்கையை நமக்கு கூறி செல்லும்.

பாக்யராஜ் துவங்கி இப்படத்தில் பலர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நிச்சயம் அனைத்து கதாபாத்திரமும் கவனிக்க வைக்கும் வகையில் இருக்கும். நான் அதிமாக புதியவர்கள் வைத்து படம் இயக்க கூடிய ஒரு இயக்குநர். இப்படத்தில் விஷாலை போன்ற பெரிய நடிகர் நடிப்பது படத்துக்கு மிகப்பெரிய பலத்தை தந்துள்ளது. இவ்வாறு இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

More News

போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ரஜினிகாந்த்

இன்று  ஐந்தாவது நாளாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரசிகர்களிடையே பேசியதாவது...

நான் பச்சை தமிழன். என்னை தூக்கி போட்டால் இமயமலையில் தான் விழுவேன்! ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கின்றார்...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் இந்த தேர்வின் முடிவுகளை இன்று காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்...

விஷாலின் அட்வான்ஸ் ஐடியாவுக்கு மாஸ் நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா?

நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கத்துடன், முழு ஈடுபாடுடன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் விஷாலுக்கு அவ்வப்போது திரைத்துறையிலேயே மறைமுகமாக பல்வேறு இடைஞ்சல்கள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது...

நயன்தாரா'வின் 'இமைக்கா நொடிகள்' டீசர் விமர்சனம்

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், அந்த பட்டியலில் இணையும் இன்னொரு திரைப்படம் தான் இந்த 'இமைக்கா நொடிகள்'