close
Choose your channels

'பரியேறும் பெருமாள்' ரீமேக்கில் நடிக்கும் ஏவிஎம் வாரிசு

Thursday, March 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு வெளிவந்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் அமோக பாராட்டை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படம் உலக அளவில் விருதுகளையும் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் கடந்த சில மாதங்களாக தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த படத்தின் கன்னட ரீமேக் குறித்த தகவல் வெளிவந்துள்ளது

இந்த படத்தில் கதிர் நடித்த கேரக்டரில் மைத்ரேயா என்பவர் நடிக்கவுள்ளார். இவர் ஏவிஎம் சரவணன் அவர்களின் பேத்தி அபர்ணா குகனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை காந்தி மணிவாசகம் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தினேஷ் நடித்த 'களவாணி மாப்பிள்ளை' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த் விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.