எப்பொழுதும் பாடல்களில் அவர் தான் ராஜா: நா முத்துகுமார் மகனின் கவிதை

  • IndiaGlitz, [Sunday,July 12 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான நா.முத்துகுமார் கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்த நிலையில் அவரது பிறந்த நாள் இன்று திரையுலகினர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற வகையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை இதோ:


 

என் தந்தை

என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.

அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்

என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்

அவர் எங்கள் காட்டில் சிங்கம்

என் தந்தையின் வரிகள் முத்து

அவர்தான் எங்களின் சொத்து

என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்

அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்

என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா

எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா

எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா

இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா

- மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்
 

More News

ஐஸ்வர்யாராயுடன் நடித்த 36 வயது நடிகர் திடீர் மரணம்

பாலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாக இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ஆகிய முக்கிய பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஒரு மில்லியனுக்காக நன்றி தெரிவித்த விஜய்சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகன், வில்லன், குணசித்திரம் உள்பட அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே மாறி விடுவார்

அமிதாப் குடும்பத்தை அடுத்து அனுபம்கெர் குடுபத்தில் நால்வருக்கு கொரோனா!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தில் உள்ள அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகிய நால்வருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை

ஐஸ்வர்யாராய், ஆராதனாவுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரனோ பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் காலமானார்: பத்திரிகையாளர்கள் சங்கம் இரங்கல்

திரையுலக மூத்த பத்திரிகையாளர் மேஜர்தாசன் அவர்கள் சற்றுமுன் காலமானார். அவருடைய மறைவு பத்திரிகையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது