பிப்ரவரி 21 முதல் தொடங்கும் பயணத்திட்டத்தின் பெயர்: கமல் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு பின்னர் ராமநாதபுரத்தில் இருந்து மக்களை சந்திக்கும் முதல் அரசியல் பயணத்தையும் ஆரம்பிக்கவுள்ளார்

இந்த நிலையில் தனது முதல் அரசியல் பயணத்திற்கு 'நாளை நமதே' என்ற பெயரை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.  தமிழகத்தை நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய பிரதேசமாக மாற்றுவதே ‘நாளை நமதே’ பயணத்தின் நோக்கம் என்று கமல் அறிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் தொடங்கும் இந்த அரசியல் பயணம், அதன் பின்னர் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் தொடரவுள்ளது

கமல்ஹாசனின் 'நாளை நமதே' என்ற இந்த அரசியல் பயணம் எந்த அளவுக்கு மக்களின் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ரஜினிகாந்த் முதலில் டெல்லியில் இருந்துதான் தொடங்க வேண்டும்: அமீர்

ரஜினிகாந்த் வெகுவிரைவில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிக்கவுள்ள நிலையில் அவரது ஆன்மீக அரசியல் குறித்து திரையுலகினர்களும் அரசியல்வாதிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த மடாதிபதியை மன்னிக்கலாமா? பாரதிராஜா

காஞ்சி மடத்தை சேர்ந்த விஜயேந்திரர் சமீபத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்ததாக கூறப்படும் சர்ச்சை

லட்சுமி ராமகிருஷ்ணனுக்குத்தான் நன்றி சொல்லணும்: அருவி நடிகை

சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் 'அருவி. 100 வருட சினிமாவுலகில் மிகச்சிறந்த படங்களில் ஒன்று என்று இந்த படத்தை கூறலாம்.

ஜெய் படத்தில் இணையும் ஜிமிக்கி கம்மல்

ஜெய் நடிப்பில் சமீபத்தில் 'பலூன்' திரைப்படம் வெளியான நிலையில் தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்தில் நடித்து வருகிறார்.

பழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்.

பழம்பெரும் தென்னிந்திய நடிகையும், நடிகை செளகார் ஜானகியின் சகோதரியுமான கிருஷ்ணகுமாரி இன்று பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 85