நெல்லை கண்ணன் ரிலீஸ்.. அப்போ ஆபரேஷன் ஃபெயிலியர்..! H.ராஜாவை சீண்டிய சீமான்.

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் மெரினாவில் போராட்டம் நடத்தினர். அதன் பின்பு நெல்லை கண்ணன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தது. அதைத் தொடர்ந்து நெல்லை கண்ணனை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நெல்லை கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்பு நெல்லை கண்ணன் தரப்பு ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்த மனு நேற்று (10.01.2020) விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை கண்ணனை போலீஸார் கைது செய்யப்பட்ட போது, பாஜகவின் தேசிய செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆப்ரேஷன் சக்ஸஸ் என்றும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து மாநில தலைமை கூடி முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தார். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை என்றும் பாஜகவின் எச்.ராஜா கூறிய ஆப்ரேஷன் சக்ஸஸ் என கூறிய பதிவிற்கு ஆப்ரேஷன் பெயிலியர் என்றும் கூறியுள்ளார்.

 

More News

பாவம் மக்கள், மத்திய அரசு என்ன சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள்...! ப.சிதம்பரம்.

இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை எங்கேயும் பார்த்ததில்லை என்றும், மத்திய அரசு அதன் திட்டங்கள் பற்றி என்ன சொன்னாலும் அதை நாட்டின் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என்று கிண்டல் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

போராட்டங்களுக்கு மத்தியில் நடுஇரவில் அமலுக்கு வந்த #CAA..!

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான விதிமுறைகள் வகுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

புதை குழியில் சிக்கிக் கொண்ட யானை. போராடி மீட்கும் பொதுமக்கள்..! வீடியோ.

உணவு தேடி கிராமத்தில் புகுந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை தவறி அங்கிருந்த புதைகுழியில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. 

உக்ரைன் விமான விபத்து எங்களது இராணுவத்தின் தவறால் நிகழ்ந்தது.. ஈரான் ஒப்புதல்.

ஈரானில் இந்த வார தொடக்கத்தில் ராணுவ தளத்திற்கு அருகே சென்ற உக்ரேன் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்திற்கு தாங்களே காரணம் என ஈரான் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. 

கொஞ்சம் சிம்ரன், கொஞ்சம் த்ரிஷா: பிரபல நடிகையை பாராட்டிய ஹீரோ!

அஜித் நடித்த 'வாலி', விஜய் நடித்த 'குஷி' உள்பட பல திரைப்படங்களை இயக்கியவரும் மெர்சல், ஸ்பைடர் உள்பட ஒரு சில பல திரைப்படங்களில் நடித்தவருமான எஸ்ஜே சூர்யா