'எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா?: தயாரிப்பாளர் ஆனார் 'நான் கடவுள்' ராஜேந்திரன்

  • IndiaGlitz, [Monday,July 10 2017]

ஸ்டண்ட் நடிகராக இருந்த ராஜேந்திரன், இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் மூலம் நடிகரானார். அதன் பின்னர் விஜய், அஜித் உள்பட பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ராஜேந்திரன் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். நிஜத்தில் அல்ல, அவர் நடிக்கும் அடுத்த படமான “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா“ என்ற படத்தில் தயாரிப்பாளர் கேரக்டரில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் நடிக்கவுள்ளார்.

அறிமுக நாயகன் அகில் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் 'சதுரங்கவேட்டை' நடிகை இஷாரா நாயர், ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகிய நான்கு பேர் இந்த படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

ரஹிம்பாபு ஒளிப்பதிவில், வர்ஷன் இசையில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை கெவின் இயக்குகிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கெவின் கூறியபோது, 'தினமும் சென்னைக்கு நூற்றுக்கணக்கான பேர் பிழைப்புக்காக பல ஊர்களில் இருந்து வருகிறார்கள் அப்படி வருகிறவர்களில் 100 பேராவது சினிமா கனவுகளுடன் வருகிறார்கள் அப்படி சினிமாவிற்காக வந்து வாய்ப்பு கிடைக்காமல் ஊருக்கே திரும்பிச் செல்லும் கதாப்பாத்திரத்தில் நாயகன் அகில் நடிக்கின்றார். அதே ஊரில் பண்ணையாராக இருக்கும் 'நான் கடவுள்' ராஜேந்திரன் அவரிடம் நடந்ததை சொல்கிறான் சஞ்சய். அவனது திறமையையும், அவனது வருத்தத்தையும் புரிந்து கொண்ட ராஜேந்திரன் நானே உன்னை வைத்து படம் தயாரிக்கிறேன் என்று தனது சொத்துக்களை விற்று படம் தயாரிக்கிறார்.

சினிமா எப்பவும் ஒரே மாதியே இருக்காது. சினிமாவில் இழந்தவர்களும் அதிகம், வாழ்ந்தவர்களும் அதிகம். அப்படிப்பட்ட சினிமாவில் நாயகன் அகிலும் தயாரிப்பாளர் ராஜேந்திரனும் ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை என்று கூறிய இயக்குனர் கெவின் இந்த படத்தின் படப்பிடிப்பு மாயவரம், கும்பகோணம், சென்னை, திருவனந்தபுரம், கன்னியாகுமரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவித்தார்.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நகைச்சுவை நடிகர்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டையும், கடுமையான விமர்சனத்தையும் மாறி மாறி பெற்று வரும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்...

அசோக் செல்வன் நடித்த 'கூட்டத்தில் ஒருவன்': திரை முன்னோட்டம்

'தெகிடி', 144, 'சில சமயங்களில்' உள்பட ஒருசில படங்களில் நடித்த அசோக் செல்வன் நடித்த அடுத்த படம் 'கூட்டத்தில் ஒருவன்'. அறிமுக இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார்...

என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. விஷால்

ஜிஎஸ்டி மற்றும் மாநில அரசின் கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து சமீபத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி வரியை தவிர வேறு எந்த வரியும் இப்போதைக்கு இல்லை என்றும் கூறப்பட்டது...

வேற லெவலில் சூர்யாவின் பிறந்த நாள்: விக்னேஷ் சிவன்

சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...

வேலைநிறுத்தத்திற்கு பின் 'இவன் தந்திரன்' படத்தின் வசூல் எப்படி?

கடந்த மாதம் 30ஆம் தேதி கவுதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜி நடித்த 'இவன் தந்திரன்' திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக இந்த படத்தின் வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது...