தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்த பொதுமக்கள்: நெகிழ்ச்சி வீடியோ

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும், காவல்துறையினரும் இரவு பகலாக தங்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர். இவர்களுடன் மக்களை காப்பாற்றும் பணியில் இருப்பவர்களில் தூய்மை பணியாளர்களின் பணியும் ஒன்று.

தன்னலமில்லாது பணி செய்து வரும் தூய்மை பணியாளர்களின் பணிக்கு பெரிய அளவில் மரியாதை கிடைப்பதில்லை என்பது அவர்களது மனதில் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த குறையை போக்கும் வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நாபா என்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர்கள் மீது மலர்களை தூவி வரவேற்றனர் ஒரு சிலர் தூய்மைப்பணியாளர்களுக்கு மாலை அணிவித்து அவர்களை கெளரவித்தனர். இதனால் அந்தந்த தூய்மைப் பணியாளர்கள் நெகழ்ச்சியுடன் ஆனந்த கண்ணீர் விட்ட சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உள்ள பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு கிடைத்துள்ள சரியான மரியாதை என்றும் அவர்களை தான் மிகவும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

More News

மூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

பாரதப் பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணம் இன்றி சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்

LPG  கேஸ் சிலிண்டர் விலையில் ரூ. 65 வரை குறைப்பு!!!

மத்திய அரசு ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 LPG கேஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கிவருகிறது.

கிருமி நாசினி சுரங்கம் கட்டிய கலெக்டர்: குவியும் பாராட்டுக்கள்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெளியே வந்து கொண்டுதானிருக்கின்றனர்.

போதையில் இருந்து மீண்டது எப்படி? 'தலைவி' பட நாயகி பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கங்கனா ரணாவத், தான் சிறுவயதில்

கொரோனா பரவல்; உடலுறவு கொள்வது பாதுகாப்பனதா??? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்???

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் பலநாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது