close
Choose your channels

கல்லூரி பெண்ணாக இருந்தபோது பார்த்தது, அதன் பிறகு இப்போதுதான்: நதியாவின் அசத்தல் பதிவு

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கல்லூரி பெண்ணாக இருந்தபோது பார்த்த படத்தின் இரண்டாம் பாகத்தை 36 வருடங்கள் கழித்து பார்ப்பதாக நடிகை நதியா புகைப்படத்துடன் கூடிய பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த ‘டாப் கன்’ என்ற திரைப்படம் கடந்த 1986ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் பட்ஜெட் 15 மில்லியன் என்ற நிலையில் 357 மில்லியன் உலகம் முழுவதும் வசூலை குவித்தது என்பதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 36 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகிய நிலையில், உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை நடிகை நதியா திரையரங்கில் பார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ‘டாப் கன்’ முதலாம் பாகத்தை பார்த்தேன் என்றும் அந்த மலரும் நினைவுகள் தற்போது இந்த இரண்டாம் பாகத்தை பார்க்கும்போது கிடைத்துள்ளது என்றும் அவர் அதில் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். நதியாவின் இந்த பதிவும், அவரது புகைப்படமும் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.