close
Choose your channels

நடிகர் சங்க தேர்தல் தேதி, இடம் அறிவிப்பு!

Tuesday, May 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதியும், தேர்தல் நடைபெறும் இடமும் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்த போது நடிகர் சங்க தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களின் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலையும் நடிகர் சங்கம் பெற்றது

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் தேர்தல் தேதி மற்றும் இடம் மே 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் சற்றுமுன் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தல் சென்னை அடையாறு எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் சங்க தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி உள்பட அனைவரும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்த்து போட்டியிடும் நடிகர்கள் யார் யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos