நடிகர் சங்க தேர்தலில் முன்னிலை அணி எது? பரபரப்பு தகவல்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் முன்னிலை பெற்ற அணி எது என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் நீதிமன்ற தடை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக எண்ணாமல் இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மற்றும் கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்ட நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி பாண்டவர் அணி முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகவும் இறுதி முடிவு இன்று மாலைக்குள் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

More News

படுக்கைக்கு அழைத்த பேராசிரியர்: 'நச்' பதிலளித்த 'மாஸ்டர்' நடிகை!

தன்னை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர் ஒருவருக்கு 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை 'நச்' என பதில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபாஸ் உடன் மீண்டும் நடிப்பீர்களா? 'ராதே ஷ்யாம்' தோல்வியை அடுத்து பூஜா ஹெக்டேவின் பதில்!

பூஜா ஹெக்டே நடித்த 'ராதேஷ்யாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் பிரபாஸுடன் மீண்டும் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பூஜா ஹெக்டே கூறிய பதில்

 'வாடிவாசல்' படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டாரா வெற்றிமாறன்? வைரல் புகைப்படங்கள்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று 'வாடிவாசல்'

ஹீரோவானார் 'குக் வித் கோமாளி' புகழ்: ஹீரோயின் இவரா?

விஜய் டிவியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர்

அஜித்-விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கின்றாரா ரஜினி-கமல் பட நடிகர்?

ரஜினி, கமல் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'அஜித் 62' படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.