நலிந்த நடிகர்களுக்கு உதவி: நடிகர் சங்கத்தின் தனி அதிகாரியின் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு காரணமாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்கள் வறுமையில் வாடுவதால் நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி, நலிந்த நடிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் பல நடிகர்களிடம் இருந்து எழுந்தன. இந்த நிலையில் நலிந்த நடிகர்களுக்கு உதவி செய்வது குறித்து தற்போது நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நலவாரியத்தில்‌ உறுப்பினர்களாக உள்ள தென்னிந்திய நடிகர்‌ சங்க உறுப்பினர்களுக்கு ரூ1000/. அவரவர்‌ வங்கி கணக்கில்‌ செலுத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில்‌ நடிகர்‌ சங்க உறுப்பினர்கள்‌ ( திரைப்பட நல வாரியத்தின்‌ உறுப்பினர்கள்‌ மட்டும்‌ ) கீழ்காணும்‌ ஆவணங்களை 10 & 11.4.2020. ஆகிய இரு தினங்களுக்குள்‌ nsct2015@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கும்‌, மின்னஞ்சலில்‌ அனுப்ப இயலாதவர்கள்‌ 98656 03660, 98417 65110 ஆகிய அலைபேசி வாட்ஸ்‌ ஆப்‌ எண்ணிற்கு போட்டோ, நகல்‌ எடுத்து அனுப்புமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

தேவையான ஆவணங்கள்‌

1. திரைப்பட நலவாரிய புத்தகத்தின்‌ முதல்‌ பக்கம்‌.
2 வங்கி கணக்கு புத்தகத்தின்‌ முதல்‌ பக்கம்‌ (அல்லது) காசோலை.

3. நடிகர்‌ சங்க உறுப்பினர்‌ அடையாள அட்டை.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தனி அதிகாரி தெரிவித்துள்ளார்.

More News

மோகன்லாலுக்கும் நடிகை ரேகாவுக்கு என்ன உறவு? பொழுது போகாமல் இருப்பவர்களுக்கு ஒரு கேள்வி 

24 மணி நேரமும் பிசியாக இருந்த பலர் தற்போது அதே 24 மணி நேரமும் வீட்டில் சும்மா இருக்கின்றனர். வடிவேலு ஒரு படத்தில் கூறியது போல் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.1150 அளித்த 4ஆம் வகுப்பு மாணவன்: நன்றி கூறிய முதல்வர்

கொரோனா தடுப்பு நிதியாக மத்திய மாநில அரசுகளுக்கு தொழிலதிபர்களும் திரையுலக பிரபலங்களும் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்து வரும்

பிறந்த குழந்தைக்கும் முகக்கவசங்கள்!!!

கொரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது

அல்லு அர்ஜூன் படத்திற்காக போட்டி போடும் சிம்பு - சிவகார்த்திகேயன்? 

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள் பிற மொழிகளிலும், பிற மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் தமிழ் மொழியிலும் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது 

இணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்!!!

கொரோனா ஊரடங்கில் சினிமாத்துறை கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.