close
Choose your channels

டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் விஜயகுமாருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

Wednesday, March 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் விஜயகுமார் கடந்த 1961ஆம் ஆண்டு முதல் ஒருசில படங்களில் நடித்து வந்தாலும், 1973ஆம் ஆண்டு சிவகுமார் நடித்த 'பொண்ணுக்கு தங்க மனசு' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதன்பின்னர் படிப்படியாக முன்னேறி ஹீரோ, வில்லன், குணசித்திர கேரக்டர் என இவர் ஏற்காத கேரக்டரே இல்லை என்ற அளவுக்கு நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகுமார் செய்த கலைச்சேவையை பாராட்டி சென்னை எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளிக்கவுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற விஜயகுமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடிகரும் எங்களது மூத்த சகோதரருமான விஜயகுமார் பொண்ணுக்கு தங்கமனசு` என்ற படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைச் சேவையாற்றி வருகிறார். தொடர்ந்து அக்னி நடசத்திரம்`, கிழக்கு சீமையிலே`, நாட்டாமை` போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிகபெரிய ஆளுமையை செலுத்தி பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நடிப்பை தொடர்கிறார்.
அவரது கலை பயணத்தை கௌரவிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைகழகம் அவருக்கு வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிப்பதை அறிந்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது கலைபயனத்திற்க்கு தலைவணங்கி தென்னிந்திய நடிகர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு அந்த வாழ்த்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.