close
Choose your channels

'நாடோடிகள்' பட நடிகர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்

Wednesday, February 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய ’நாடோடிகள்’ திரைப்படம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் கேகேபி கோபாலகிருஷ்ணன் இன்று காலை காலமானார். அவர் ஈரோடு - வெள்ளோடு செல்லும் வழியில் குப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடோடிகள் திரைப்படத்தில் அனன்யாவின் தந்தையாக நடித்திருந்த இவர் தனது மகளுக்கு அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிவகார்த்திகேயனின் ‘வருந்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் துணை நடிகராக நடித்த கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் நெஞ்சுவழி காரணமாக உயிரிழந்ததாக தெரிகிறது. கே.கே.பி.கோபாலகிருஷ்ணன் மறைவிற்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.