'பொன்னியின் செல்வன்' நடிகையுடன் டேட்டிங் செல்கிறாரா நாக சைதன்யா?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும் தெலுங்கு பிரபல நடிகருமான நாகசைதன்யா ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நடிகையுடன் டேட்டிங் செய்வதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஆன நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதிகள் தீவிர முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் நாக சைதன்யா ஜுப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் புதிய பங்களா ஒன்றை கட்டியுள்ள நிலையில் அந்த பங்களாவுக்கு பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலான நிலையில் இருவரும் டேட்டிங் செல்வதாகவும் கூறப்பட்டது.
நடிகை ஷோபிதா துலிபாலா, பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.