எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்தீங்க… எக்குத்தப்பான கேள்விக்கு நாகசைதன்யாவின் பதில்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் நடிகர் நாகசைதன்யாவிடம் இதுவரை எத்தனைப் போருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறீர்கள் என்றொரு வித்தயிசமான கேள்வி எழுப்பட்ட நிலையில் அதற்கு அவரும் பொறுமையாகப் பதிலளித்துள்ளார். இந்தத் தகவல் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் நாகசைதன்யா நடித்துமுடித்துள்ள ‘கஸ்டடி‘ திரைப்படத்தின் பரமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக நடிகர் நாகசைதன்யா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட போது இதுவரை எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்து இருக்கிறீர்கள் என்று வித்தியாசமாகக் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. இந்தக் கேள்விக்கு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத நடிகர் நாகசைதன்யா கணக்கில் வைத்துக்கொள்ளவில்லை. இதுவரை படத்திலேயே பல முத்தக் காட்சிகளில் நடித்துவிட்டேன். எப்படி கணக்குப்போட முடியும் என்று மறுகேள்வி கேட்டு அசர வைத்திருக்கிறார்.
மேலும் உங்களின் ரகசிய க்ரஷ் யார் என்றொரு கேள்வியும் அவரிடம் எழுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குப் பதிலளித்த நாகசைதன்யா இதிலென்ன ரகசியம்? நான் சமீபத்தில் பாபிலோன் எனும் ஹாலிவுட் திரைப்படம் பார்த்தேன். அதில் நடித்திருந்த மார்கோ ராபி மிக அருமையாக நடித்திருந்தார். அவர் மீதும் அவருடைய நடிப்பு மீதும் எனக்கு க்ரஷ் வந்துவிட்டது என்று சொல்லி மேலும் அங்கிருந்தவர்களை மிரள வைத்திருக்கிறார்.
பொதுவாக முத்தம் குறித்த கேள்விகளைக் கேட்டால் நடிகர், நடிகைகள் பலரும் பதிலளிக்க விரும்பாமல் நகர்ந்துவிடுவர். ஆனால் நடிகர் நாகசைதன்யா எக்குத்தப்பான கேள்விகளுக்கு கோபமில்லாம் விளையாட்டாக பதிலளித்து இருப்பது ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments