நாக சைதன்யா-சமந்தா திருமணம் எப்போது? நாகார்ஜூனே தகவல்

  • IndiaGlitz, [Tuesday,September 06 2016]

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனன் மகன் நாக சைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே உறுதியாகியுள்ள நிலையில் திருமண தேதி குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் நாகார்ஜூனன் இளையமகன் அகில் மற்றும் அவரது நீண்ட நாள் தோழி ஸ்ரேயாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாகார்ஜூன கூறியபோது, 'தனது இரண்டு மகன்களும் தங்களது வாழ்க்கை துணைகளை தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்த உண்மையான தகவலை நான் அறிவிக்கும்வரை அனைவரும் பொறுமை காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
அனேகமாக நாகசைதன்யா-சமந்தா திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும் என தெரிகிறது.

More News

விஜய்-செல்வராகவன் திடீர் சந்திப்பு. அடுத்த படத்தை இயக்குவாரா?

இளைதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 70% முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு...

அஜித்-விஜய்க்காக விட்டு கொடுத்த ராகவா லாரன்ஸ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் டைட்டில் 'பைரவா' என்பது நேற்று முன் தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது...

நானும் ரஜினியும் கலியுக துரியோதனன்-கர்ணன். பிரபல நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பரும், பிரபல தெலுங்கு நடிகருமான மோகன்பாபு சமீபத்தில் ரஜினியை சந்தித்து

கிடாரி-குற்றமே தண்டனை. சென்னை வசூல் நிலவரம்

கடந்த வெள்ளியன்று வெளியான சசிகுமாரின் 'கிடாரி' மற்றும் மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடித்த 'குற்றமே தண்டனை'...

'ஜோக்கர்' இயக்குனருக்கு கிடைத்த அடுத்த வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகில் அரசியல் நையாண்டி படம் வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில் சமீபத்தில் வெளிவந்த ராஜூமுருகனின் 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது...