நாகர்கோவில் காசியிடம் சிக்கிய நடிகைகள், விஐபி மனைவிகள் யார் யார்? அதிர்ச்சித் தகவல் 

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

தமிழகத்தையே உலுக்கிய நாகர்கோவில் காசி விவகாரம் தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளது என்பது தெரிந்ததே. பள்ளிக்குழந்தைகள் முதல் விஐபிக்களின் மனைவிகள் வரை சுமார் 80 பெண்கள் காசியின் காதல் வலையில் சிக்கியதாகவும், இவர்களில் பலரது ஆபாச வீடியோக்கள் காசியின் ரகசிய லேப்டாப்பில் இருப்பதாகவும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது

இதுகுறித்து சிபிசிஐடி மேலும் விசாரித்தபோது காசிக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இருந்து ஒரு லேப்டாப் மீட்கப்பட்டது. ஆனால் அந்த லேப்-டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் அவரது தந்தை தங்கப்பாண்டியன் அழித்து விட்டதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து காசியின் தந்தை மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தற்போது காசியின் தந்தையின் பெயரும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் அவரும் தீவிர விசாரணை வளையத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காசியின் தந்தை அழித்த வீடியோ ஆதாரங்கள் மீண்டும் மீட்கப்பட்டு வருவதாகவும் அதில் சிறுமிகள் முதல் நடிகைகள் மற்றும் விஐபிக்களின் மனைவிகள் வரை பலரது தகவல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் தற்போது காவல்துறையினர்களால் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தகவல்கள் வெளியாகும் பட்சத்தில் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது