நடிகர் நகுல் நிச்சயதார்த்தம்

  • IndiaGlitz, [Saturday,November 14 2015]

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் நடிகை தேவயானியின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாய்ஸ்' படத்தை அடுத்து இவர் காதலில் விழுந்தேன்', மாசிலாமணி', 'கந்தகோட்டம்', நான் ராஜாவாக போறேன்', வல்லினம்', தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகர் நகுலுக்கும், ஸ்ருதி பாஸ்கர் என்ற பெண்ணுக்கும் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சயதார்த்ததின்போது இருவரும் மோதிரம் மாற்றி கொண்ட புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வெளிவந்துள்ளது.

நடிகர் நகுல் தற்போது 'அமளி துமளி' மற்றும் 'நாரதன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 'நாரதன்' ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இதய நோயாளியுடன் ரஜினி. ஒரு உணர்ச்சிமயமான சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

கோலிவுட்டின் செண்டிமெண்ட்டை உடைத்த 'தல' தங்கை

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் பட டைட்டிலான 'தர்மதுரை' டைட்டில் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

ஸ்ரீதேவி - 'புலி' தயாரிப்பாளர்களுக்கு இடையே சமரசம்

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் வெளியாகி, ஊடகங்களின் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வசூலை பெற தவறியது...

'பசங்க 2' ரிலீஸ் தேதி தள்ளி போகிறதா?

சூர்யா நடித்த 'பசங்க 2' மற்றும் '24' ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

'வேதாளம்' ரிலீஸுக்கு பின்பும் தொடரும் வியாழக்கிழமை செண்டிமெண்ட்

அஜீத் நடித்து கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'வேதாளம்' படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தீவிர சாய்பாபா பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே....