close
Choose your channels

ரஜினி மக்கள் மன்றத்தின் சேவைக்கு பழம்பெரும் அரசியல்வாதி வாழ்த்து!

Sunday, June 23, 2019 • தமிழ் Comments

சென்னையில் கடந்த சில நாட்களாக தண்ணீர்ப்பஞ்சம் தலைவிரித்தாடி வரும் நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாரையும் குறை கூறாமல், போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு இடைஞ்சல் செய்யாமல், ரஜினி மக்கள் மன்றத்தினர் கடந்த சில நாட்களாக தங்களால் முடிந்த அளவுக்கு லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

தங்களுடைய சொந்தக்காசை செலவு செய்து வெளியூரில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சென்னை மக்களுக்கு அவர்கள் வழங்கி வருகின்றனர். அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் தினமும் ஆளுக்கு ஒரு லாரி தண்ணீர் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பினாலே பாதி தண்ணீர் கஷ்டம் தீர்ந்து விடும். ஆனால் அதனை செய்யாமல் தண்ணீர் அரசியல் செய்து வருவதாக சமூக நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று சென்னையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றாகிய சிட்லப்பாக்கம் ஏரியை தங்களது சொந்த முயற்சியால் தூர்வாரி வருகின்றனர். இந்த முயற்சியை பழம்பெரும் அரசியல்வாதியும், எளிமையும், கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரருமான நல்லக்கண்ணு அவர்கள் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'தாய்ப்பால் போல் சுத்த அரசியல் செய்யும் நல்லகண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, ரஜினி சாருக்கே பெருமை தான்!! வாழ்க உங்கள் சமூகத் தொண்டு' என்று குறிப்பிட்டுள்ளார்
 

Get Breaking News Alerts From IndiaGlitz