பெரியார் சாலைக்கு பெயர் மாற்றம்? கடும் கண்டனம் வெளியிட்ட வைகோ!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

சென்னை ரிப்பன் மாளிகையில் அருகே தொடங்கும் நெடுஞ்சாலைக்கு இதுவரை ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்றே பெயர் இருந்து வந்தது. இந்தப் பெயரை மாற்றி தற்போது நெடுஞ்சாலைத் துறை சார்பாக கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு எனப் பெயர் பலகை வைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் பெயர் மாற்றத்தைக் கண்டித்து பலரும் கண்டனம் தெரிவிக்கத் துவங்கி உள்ளனர்.

முன்னதாக பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயரை பெரியாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொது மக்கள் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என மாற்றி வைக்க வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எம்.ஜி.ஆர் அவர்கள் கடந்த 1979 ஆம் ஆண்டு ஈ.வெ.ரா நெடுஞ்சாலை எனப் பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளார்.

இப்படி வழங்கப்பட்ட ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்ற பெயர் தற்போது தமிழக நெடுஞ்சாலை துறை இணையதளத்தில் “கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத்திற்கு பலரும் கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளார்.

அதில், “சென்னை மையத் தொடரி நிலையம், ரிப்பன் மாளிகை அருகே நெடுஞ்சாலைத் துறையினர், கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று பெயர் பொறித்த பலகையை புதிதாக நாட்டி இருக்கிறார்கள். 1979 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவை ஓராய்டு தொடர் விழாவாக எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக அரசு கொண்டாடியது. அப்போது பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை என்ற பெயரை “பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை” என்று மாற்ற மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவ்வாறு பெயர் மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்தார்.

ஆனால் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்துக்கின்ற எடப்பாடி பழனிசாமி அரசு நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் தந்தை பெயரியார் பெயரை நீக்கிவிட்டு கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றம் செய்து இருக்கிறது” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டு இருக்கிறார்.