தேர்தல் பிரச்சாரம்: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வானதி ஸ்ரீனிவாசனுடன் நடனமாடிய பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,March 27 2021]

தேர்தல் பிரச்சாரத்தின்போது கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பிரபல நடிகை ஒருவர் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் இந்த தொகுதியில் கடும்போட்டி இருப்பதாகவும் இருவரில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் ஆகிய இருவருமே தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று வானதி சீனிவாசனுடன் பிரபல நடிகை நமீதா தேர்தல் பிரச்சாரம் செய்தார். இருவரும் வாகனத்தில் பொது மக்களிடம் வாக்கு கேட்டு வந்து இருக்கும்போது திடீரென ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சில இளைஞர்கள் நடனமாடினார்கள். அப்போது வானதி ஸ்ரீனிவாசனும் நடிகை நமிதாவும் வாகனத்திலிருந்து இறங்கி வந்து ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடினார்கள். இது குறித்த வீடியோவை வானதி ஸ்ரீனிவாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

பிக்பாஸ் சீசன் 4ஐ மிஸ் செய்த இவர், சீசன் 5ல் கலந்து கொள்வாரா?

பிக்பாஸ் சீசன் 4ஐ மிஸ் செய்த பிரபலம் ஒருவர் பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகும் சிம்பு படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது என்பதும் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியான மறுநாளில் தான் சிம்புவின் 'ஈஸ்வரன்'

திமுக காவி உடுத்தவும் தயங்காது? கடுமையாக விமர்சிக்கும் அரசியல் வீடியோ!

சமூக நீதி கொள்கையைக் கொண்டு இருக்கும் திமுக மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பிறகு தனது கொள்கையில் பிடிப்புடன் இருக்கிறதா? என்ற சந்தேகத்தை சிலர் கிளப்பி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து கருக்கலைப்பு செய்துவந்த போலி மருத்துவர்!

தெலுங்கானா மாநிலத்தில் பிஎஸ்சி டிகிரி மட்டுமே படித்த ஒருவர் நகர்ப்பகுதியில் மருத்துவமனை தொடங்கி அதில் பல பெண்களுக்கு மறைமுகமாக கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது

போக போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்: காங்கிரஸில் இணைந்த ஷகிலா பேட்டி!

தமிழ் மலையாள திரைப்பட நடிகையும் குக் வித் கோமாளி போட்டியாளர்களில் ஒருவருமான ஷகிலா, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில் போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள் என்று பேட்டி அளித்துள்ளார்