close
Choose your channels

த்ரிஷாவின் 'பரமபதம் விளையாட்டு'க்கு பாராட்டு தெரிவித்த பிரபல நடிகை

Saturday, February 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா நடித்த ’பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என்றும் அதில் த்ரிஷா உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு அஜித் விஜய் உள்பட முக்கிய நடிகர்களுடன் நடித்த, பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான நடிகை நமிதா பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நடிகையும் தங்கள் வாழ்க்கையில் ’பரமபத விளையாட்டு’ படத்தில் த்ரிஷா நடித்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று காத்திருப்பார்கள்.இந்த படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதி மிகப்பெரிய ப்ளஸ் ஆக இருக்கும் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

திருஞானம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் த்ரிஷா, நந்தா துரைராஜ், ரிச்சர்ட்ஸ் ரிஷி, வேல ராமமூர்த்தி, ஏ.எல் அழகப்பன் உள்பட பலர் நடித்துள்ளனர். அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பில் தினேஷ் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.