பாஜகவில் பதவி பெற்ற நான்கு தமிழ் நடிகைகள்!

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கு இடையே பாஜக தமிழகத்தில் தன்னை நிலை நிறுத்தி கொள்ள கடும் முயற்சியில் உள்ளது. தமிழகத்தில் தாமரையை மலர வைக்க அக்கட்சியின் நிர்வாகிகள் கடந்த சில வருடங்களாக தீவிர முயற்சியில் உள்ளனர். குறிப்பாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் நியமனம் செய்யப்பட்ட பின் பல அதிரடி மாற்றங்கள் கட்சியில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் சற்று முன் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை பாஜக தமிழகத் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் மாநிலத் துணைத் தலைவர்களாக நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், சமீபத்தில் திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த விபி துரைசாமி உள்பட பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக ஒருசில திரையுலக பிரபலங்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நடிகை நமீதா, நடிகை குட்டிபத்மினி, நடிகை கௌதமி மற்றும் நடிகை மதுவந்தி ஆகிய நான்கு நடிகைகளும் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

ரேப் செய்தால் மரண தண்டனை: உடனே சட்டம் இயற்றுங்கள்: பிரபல நடிகை ஆவேசம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உத்திரப்பிரதேசத்தில் ரவுடிகள் அட்டகாசம்: டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் மரணம்!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு என்ற பகுதியில் ரவுடிகள் காவல் துறையினர் மீது நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலால் டிஎஸ்பி உட்பட 8 போலீஸார்

இன்று முதல் போரை தொடங்குகிறது மக்கள் நீதி மய்யம்: கமல் அறிவிப்பு

உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஆவேசமாக தனது டுவிட்டரில் அவ்வப்போது பல டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார்

லடாக்கில் திடீர் விசிட்: கெத்து காட்டிய பிரதமர் மோடி

இந்தியா சீனா ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் திடீரென ஏற்பட்ட மோதலில் தமிழக வீரர் உள்பட 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

கொரோனா வைரஸை தடுக்க முகக்கவசம் போல இதுவும் ரொம்ப முக்கியம்!!! FDA வின் புதிய அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எப்படி பரவும்? பொருட்களின் மீது எவ்வளவு நேரம் உயிர்வாழும்?