நடிகை நமீதா ஒரு திருடி: பிரபல ஹீரோவின் ஷாக் பேச்சு!

  • IndiaGlitz, [Sunday,June 12 2022]

சமீபத்தில் நடிகை நமீதாவின் சீமந்தம் விழா நடைபெற்றபோது ’நமீதா ஒரு திருடி’ என பிரபல ஹீரோ ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000ஆம் ஆண்டுகளில் இருந்த நமீதா தொழிலதிபர் வீரேந்திர சவுத்ரி என்பதை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமிபத்தில் நமிதா கர்ப்பமான நிலையில் அவரது சீமந்தம் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகப் பிரபலங்களான ராதிகா சரத்குமார், ஸ்ரீகாந்த், பாக்யராஜ் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த் பேசியபோது, ‘நமீதாவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும் என்றும், நானும் அவரும் நிறைய படங்களில் பணியாற்றியுள்ளோம் என்று தெரிவித்தார். மேலும்  நமீதா ஒரு குழந்தை மாதிரி என்றும் ஆனால் அவருக்கே இன்று குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறிய அவர் நமீதா பலமுறை சாக்லேட் திருடி நான் பார்த்திருக்கிறேன் என்றும் காமெடியாக கூறினார்.

ஒருமுறை படப்பிடிப்புக்கு சென்றபோது ஒரு கிலோ சாக்லேட்டை நமீதா வாங்கினார் என்பது என்றும் எதற்காக இவ்வளவு சாக்லேட் என்று கேட்டபோது சாப்பிட வேணும்ல என்று குழந்தை போல் அவர் கூறியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை என்றும் கூறினார். 

நடிகை நமீதா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் ’இந்திர விழா’ ’பம்பரக் கண்ணாலே’ உள்பட ஒரு சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'என்னை வாடின்னு கூப்பிட்டான் ஆர்ஜே பாலாஜி: ஊர்வசி கூறும் ஷாக்கிங் தகவல்

ஊர்வசி நடித்த 'வீட்ல விசேஷம்' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பேசிய ஊர்வசி, 'என்னை ஆர்ஜே பாலாஜி வாடி என்று கூப்பிட்டான்'

ஹன்சிகா படத்தில் வில்லனாகும் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்: இயக்குனர் யார் தெரியுமா?

பிரபல நடிகை ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர். ரஹ்மான் தான் இது எல்லாத்துக்கும் காரணம்: யுவன்ஷங்கர் ராஜா

ஏ.ஆர். ரஹ்மான் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என யுவன்சங்கர்ராஜா அளித்த பேட்டியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

ஆற்றல் மிக்க தமிழ்நாட்டின் மக்கள் முதல்வருக்கு நன்றி: ஏ.ஆர்.ரஹ்மான் டுவிட்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

27 வருடத்திற்கு பின் அந்த பிரபலத்தை சந்தித்தேன்: ஜிவி பிரகாஷ் பகிர்ந்த புகைப்படங்கள்

ஜிவி பிரகாஷூக்கு தற்போது 34 வயது ஆகும் நிலையில் 7 வயதில் அதாவது 27 வருடங்களுக்கு முன் சந்தித்த அந்த பிரபலத்தை மீண்டும் சந்தித்தேன் என இரண்டு புகைப்படங்களை ஜிவி பிரகாஷ் குமார்