close
Choose your channels

பிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்

Saturday, May 23, 2020 • தமிழ் Comments

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு சில தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸை முடிந்த அளவு கட்டுப்படுத்துகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி கூறும் வகையில் அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை நமீதா ஒரு பாடலை தயாரித்து அந்த பாடலை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்

’மோடி, நரேந்திர மோடி’ என்ற தொடங்கும் இந்த பாடலில் பிரதமர் மோடியின் அரசு கொரோனா வைரஸுக்கு எதிரான எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்தும், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் சிக்கியபோது அவரை மீட்டு வந்தது குறித்தும் உள்ள வரிகள் உள்ளன

தெலுங்கில் உருவாகி உள்ள இந்த பாடலை ராமகிருஷ்ணன் என்பவர் எழுதி உள்ளார் .எஸ்கே பாலசந்திரன் என்பவர் இந்த பாடலை கம்போஸ் செய்து பாடியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது நமீதாவின் சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து வைரலாகி வருகிறது என்பதும் பாஜகவினர் இந்த பாடலை ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை நமீதா தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார் என்பது தெரிந்ததே

Get Breaking News Alerts From IndiaGlitz