அம்மாவுக்கு என் பணிவான வாழ்த்துக்கள் : நடிகை நமீதா

  • IndiaGlitz, [Friday,May 20 2016]
சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நடிகை நமிதா, தேர்தலில் அக்கட்சி பெற்ற வெற்றி குறித்து தனது கருத்துக்களை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். நமீதா அறிக்கையின் முழுவிபரம் பின்வருமாறு:

"புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் அன்றாடம் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளது.
மேலும், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரின் எல்லா தேவைகளையும் அம்மா அவர்கள் பார்த்து பார்த்து நிறைவேற்றியிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு உருவான அறுமுனை போட்டிகளையும் தாண்டி தனிப்பெரும் வெற்றியை அம்மாவுக்கு மக்கள் பரிசளித்திருக்கிறார்கள். இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது. வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார்.
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்.
இரட்டை இலைக்கு வாக்களித்து அம்மாவை மீண்டும் அரியணையில் அமர வைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், வெற்றிக்காக அயராது பாடுபட்ட கழக தொண்டர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்!.
இவ்வாறு நமீதா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்டுள்ளார்.

More News

த்ரிஷாவின் 'நாயகி' ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகியாக இருந்து வரும் த்ரிஷா இன்றைய...

கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' ரிலீஸ் தேதி

உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு'...

'இறைவி'யின் முக்கிய தகவல் இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 'இறைவி' திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம்...

சூர்யாவின் 'S3' படத்தில் கார்த்தி?

சமீபத்தில் வெளியான '24' படத்தின் வெற்றி சூர்யா தரப்பை மகிழ்ச்சி...

தனுஷ் படத்தின் வில்லனாகும் பிரபல இயக்குனர்

தனுஷ் நடித்து முடித்துள்ள 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய படங்களின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்...