close
Choose your channels

ரஜினி-கமல் கண்கள், விஜய் மூளை, சூர்யா இதயம்: பிரபல நடிகையின் பரபரப்ப்பு பேட்டி!

Sunday, September 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி-கமல் கண்கள், விஜய் மூளை, சூர்யா இதயம்: பிரபல நடிகையின் பரபரப்ப்பு பேட்டி!

தமிழக பாஜகவில் கடந்த சில மாதங்களாக பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்த நிலையில் அவர்களில் ஒருவராக நடிகை நமீதாவும் இருந்தார் என்பது தெரிந்ததே. பாஜகவில் இணைந்த ஒருசில மாதத்தில் அவருக்கு அக்கட்சியில் பதவியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனது அரசியல் மற்றும் சினிமா எதிர்காலம் குறித்து முன்னணி ஊடகம் ஒன்றுக்கு நடிகை நமீதா பேட்டி அளித்தபோது, ‘ரஜினி கமல் ஆகிய இருவரும் இரண்டு கண்கள் மாதிரி என்றும், விஜய் மூளை மாதிரி என்றும், சூர்யா இதயம் மாதிரி என்றும் கூறியுள்ளார். மேலும் ரஜினி, கமல், விஜய், சூர்யா, ஆகிய நான்கு பேருமே அரசியலில் பிரகாசிக்க போகிறார்கள் என்றும் நான்கு பேருமே பலம் மிகுந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்

மேலும் சினிமா, அரசியல் ஆகிய இரண்டுக்கும் சம அளவில் நேரம் ஒதுக்க போவதாகவும், இனி சென்னை தான் எனது சொந்த ஊர் என்றும், தமிழகத்தில் தான் இனி அரசியல் செய்வேன் என்றும் என்றும் கூறியுள்ளார்

மேலும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன் என்றும் நமீதா கூறியுள்ளார். இதனை அடுத்து வரும் 2020ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நமீதா போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அரசியலில் இருந்தாலும் சினிமாவில் வரும் வாய்ப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறினார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.